News August 27, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 4, 2026

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 4, 2026

சட்டமன்ற தேர்தல் மண்டல அலுவலர் பயிற்சி கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மிருணாளினி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல் மண்டல அலுவலர் பயிற்சி கூட்டம் நடைப்பெற்றவுள்ளது. இதில் தேர்தல் மண்டல அலுவலர்கள் தங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டலத்தின் விவரம், உடன் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் விவரம், வாகன விவரம் ஆகியவற்றை தேர்தல் பிரிவு வட்டாட்சியரிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

பெரம்பலூர் ஊர் காவல் படைக்கு 19 பேர் தேர்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான பயிற்சிகள் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஊர்க்காவல் படைக்கு 16 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!