News August 27, 2025
அப்பாவுக்கு அபர்னா சென் மீது காதல்: ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன், ஏன் பெங்காலி கற்றார் என அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலகலப்பாக கூறியுள்ளார். பெங்காலியை அப்பா (கமல்) கற்றுக் கொண்டதற்கு நடிகை அபர்னா சென் மீதான காதலே காரணம் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனாலேயே ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜிக்கு அபர்னா என்று பெயர் வைத்ததாகவும் ஸ்ருதி கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகவே ‘என்ன ஒரு வெளிப்படையான பகிர்வு’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
அஸ்வினுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியா விடை அளித்த CSK

அஸ்வினை ‘கேரம் பால் திரிபுர சுந்தரன்’ என வர்ணித்து CSK நிர்வாகம் பிரியாவிடை அளித்துள்ளது. CSK-ன் பாரம்பரியத்தை தூணாக நிறுத்தி, சேப்பாக்கத்தை ஒரு கோட்டையாக கர்ஜிக்க வைத்ததாகவும், சூப்பர் கிங்காக தொடங்கிய அவரது பயணம், ஒரு சூப்பர் கிங்காகவே முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், என்றென்றும் அவர் சிங்கம் தான் எனவும், என்றென்றும் அவர் நம்மில் ஒருவர் தான் என்றும் கூறியுள்ளது.
News August 27, 2025
SPACE: நம்மால் Time Travel செய்ய முடியுமா?

Interstellar படத்தில் 5வது பரிமாணம் மூலம் டைம் டிராவல் செய்யும் காட்சிகளை காட்டியிருப்பார்கள். ஆனால் நாமும் அதை செய்ய முடியுமா என்றால் இல்லை. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் 4வது பரிணாமத்தில் நேரம் என்பது நேர்கோட்டில் செல்லும் விஷயம். இதை யாராலும் நிறுத்தவோ மாற்றவோ முடியாது. அதனால் டைம் டிராவல் சாத்தியமில்லை என அறிவியல் சொல்கிறது. Time Travel பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..
News August 27, 2025
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆக.30, 31 தேதிகளில் டாஸ்மாக் கடைகள், FL உரிமம் பெற்ற பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட கோயில் விஷேச நாள்களில் விடுமுறை விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குமரியில், சொத்தவிளை, சுசீந்திரம், தோவாளை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாகும்.