News August 27, 2025
அப்பட்டமான ஹிந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் சாடல்

டிக்கெட் கவுன்ட்டர்கள், அலுவலக ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கும்படி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது அப்பட்டமாக ஹிந்தி திணிப்பை அனைத்து வகையிலும் மேற்கொள்வதன் மற்றொரு அடையாளம் என MP சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மொழி அறிவற்றவர்கள் ஊழியர்களாக இருப்பதே சமீபத்தில் ரயில்வேயில் நடைபெற்ற விபத்துகளுக்கு காரணம் என்றும் சாடினார்.
Similar News
News September 10, 2025
இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?
News September 10, 2025
இந்தியா ஒரு ரத்த காட்டேரி: டிரம்பின் ஆலோசகர்

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் USA-ன் ரத்தத்தை உறிஞ்சும் ரத்த காட்டேரிகளாக இருப்பதாக டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார். வரலாற்று ரீதியாகவே ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்க்கும் பிரிக்ஸ் நாடுகள், எவ்வளவு நாள் ஒற்றுமையாக இருக்கும் என்பதை பார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா உடன் வர்த்தகத்தில் ஈடுபடாவிட்டால் அந்நாடுகள் பிழைப்பதே கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
₹200 கோடி.. வசூலில் கெத்து காட்டும் ‘லோகா’

இந்தியாவின் முதல் Super Women படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உலகம் முழுவதும் ₹200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி செலவில் இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து இருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் கதை நாயகியாக நடிக்க, டொமினிக் அருண் இப்படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் உருவாகி, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது.