News August 27, 2025

பிஹார் புறப்பட்டார் CM ஸ்டாலின்

image

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி, பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், இதில் பங்கேற்பதற்காக CM ஸ்டாலின் பிஹார் புறப்பட்டுள்ளார். சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு யாத்திரையில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2.40 மணிக்கு CM சென்னை திரும்புகிறார்.

Similar News

News March 6, 2026

சிறுவர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பயன்படுத்த தடை

image

சோஷியல் மீடியாக்கள் மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகவும் தொடர் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் X, இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

News March 6, 2026

OPS மாற்றினார்.. திமுகவில் பரபரப்பு

image

திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை, OPS தன் சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் நடத்துவது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேனியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் ஐக்கியமாவதால், அங்கு கூட்டத்தை கூட்ட முடியாது என OPS நினைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை என்றால் அங்குள்ள PTR பழனிவேல், மூர்த்தி ஆகியோரை கூட்டத்தை கூட்டிவிடுவர் என கணக்கு போட்டுள்ளாராம்.

News March 6, 2026

ராமதாஸுக்கு மீண்டும் பின்னடைவு

image

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளரான ப.சுவாமிநாதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாக இந்த வேட்பாளரை ராமதாஸ் களமிறக்கினார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ராமதாஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

error: Content is protected !!