News April 9, 2024
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க பிப்.9 முதல் மார்ச்.16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க முடியாதவர்களின் நலன் கருதி இன்று மற்றும் நாளை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
தி.மலை: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்
News March 8, 2026
ஆரணியில் அதிரடி; அதிமுகவிற்கு தாவிய OPS ஆதரவாளர்கள்

ஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆர்.டி.ஏழுமலை, எஸ்.தங்கதுரை, ஜி.மணிகண்டன், கே.சதாசிவம், ரவி, கே.ரமேஷ், எஸ்.ஆறுமுகம், எஸ்.பாண்டியன், கஜேந்திரன், ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர், மத்திய மாவட்ட அதிமுக செயலாளரான ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். OPS ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணையும் நிலையில், அதிமுகவில் இணைத்து பேசுபொருளாகி உள்ளது.
News March 8, 2026
தி.மலை: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

செங்கம் அருகே அம்மாபாளையம் – புதுப்பாளையம் சாலையில் ஒரு டூவீலரில் சென்ற புதூர் செங்கம் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (19), சூர்யா (19), சந்துரு (18) ஆகியோர் சென்றனர். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த மூவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிவப்பிரகாசம் துடிதுடித்து உயிரிழந்தார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.


