News April 9, 2024
ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் மைக் மோகன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில், ரஜினிக்கு வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஜினியின் 171ஆவது படமான இது, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும், ஷாருக்கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 20, 2026
புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.
News March 20, 2026
என்ன செய்கின்றனர் SC/ST எம்எல்ஏக்கள்?

தமிழக சட்டப்பேரவையில் <<19430913>>ரிசர்வ் தொகுதிகள்<<>> மூலம் 46 பேர் MLA-க்களாக உள்ளனர். ஆனால், தங்களின் சமூக மக்களின் பிரச்னைகளுக்கு அவர்கள் பேசுவதில்லை என்ற விமர்சனம் உள்ளது. வன்கொடுமை சம்பவமாக இருந்தாலும், பட்டியல் மக்களுக்கான நிதியை தவறாக பயன்படுத்தினாலும் இவர்கள் போராடுவதில்லை, பதவிக்காக தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் கருத்து?
News March 20, 2026
2-ம் கட்டமாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் விஜய்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தவெகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழகம் & புதுச்சேரியிலுள்ள 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.


