News August 27, 2025

ஆக.28 அன்று நடைபெறும் முகாம் விவரம்

image

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி, போடி, தேனி, கம்பம் வட்டாரம் போன்ற பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஆக.28 அன்று நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

தேனி: கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் (77). இவருக்கும் இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட கண்ணப்பன் சாப்பிடாமலும் உடல் நல குறைபாட்டுக்கான மாத்திரைகள் உண்ணாமலும் இருந்துள்ளார். இதனால் நேற்று (செப்.21) வீட்டு கழிவறையில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கம்பம் போலீசார் விசாரணை.

News September 22, 2025

தேனி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

தேனியில் 100 லிட்டர் மதுபானம் பறிமுதல்

image

தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் பாலசுப்பிரமணியன், சிஜூடேனியல் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு சைலன்ட்வாலி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 100 லிட்டர் மதுபானங்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.அவர்களிடமிருந்து , ஆட்டோ, 2 அலைபேசிகள், ரூ.1200 ஆகியவை கைப்பற்றப்பட்டன.

error: Content is protected !!