News August 27, 2025
விஜய்யை பாட்டுப்பாடி விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு

2 மாநாட்டிலேயே விஜய்யின் சாயம் வெளுத்துவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். ‘நரியின் வேசம் கலைந்து போச்சு.. டும் டும் டும்.. ராஜா வேசம் கலைந்து போச்சு டும் டும் டும்..’ என்பது போல் அனைத்து தரப்பு விமர்சனங்களை விஜய் தாங்கி சென்று கொண்டிருக்கிறார் என கிண்டலாக தெரிவித்தார். அவர் இன்னும் 2, 3 மாநாடுகள் நடத்தினாலே, காலி பெருங்காய டப்பா போல் ஆகிவிடுவார் எனவும் சேகர்பாபு கூறினார்.
Similar News
News August 27, 2025
போர்க்குரல் எழுப்பியுள்ளது பிஹார்: CM ஸ்டாலின்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிஹாரில் நடத்திவரும் யாத்திரையில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக 2,000 கிமீ கடந்து வந்துள்ளதாக கூறினார். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகிறது என்பதால் பிஹார் போர்க்குரல் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். BJP-க்கு பயப்படாமல் அரசியல் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என்றார்.
News August 27, 2025
மகளிர் உரிமைத் தொகை.. 24 மணி நேரத்தில் சர்ப்ரைஸ்

முதல் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி (SMS) மூலம் பதில் அனுப்பப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
News August 27, 2025
ADMK-ஐ RSS வழி நடத்துவதில் என்ன தவறு: எல்.முருகன்

ஆர்எஸ்எஸ் கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.