News August 27, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 27)

1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
Similar News
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.


