News August 27, 2025
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News August 27, 2025
கட்சி தொடங்கிய பின், முதல்முறையாக விஜய்

‘விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்’ என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக கட்சியை துவங்கிய அவர், அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது சர்ச்சையானது. கடந்த ஆண்டு வாழ்த்து கூறாத விஜய், இந்த ஆண்டு கூறியுள்ளதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
News August 27, 2025
RECIPE: வயிற்று கொழுப்பை குறைக்கும் எள்ளு துவையல்!

◆கொலஸ்ட்ரால் & உடல் கொழுப்பு குறைய எள்ளு துவையல் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
➥எள்ளை, வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும்.
➥அவற்றை மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த தேங்காய், உப்பு & புளி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
➥தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால், எள்ளு துவையல் ரெடி! SHARE IT.
News August 27, 2025
50% வரிவிதிப்பு அமலானது.. ஸ்தம்பிக்கும் துறைகள்

USA-வின் 50% வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் உற்பத்தி, ஸ்டீல், லெதர் ஆகியவற்றிற்கு இந்த வரி விதிப்பு பொருந்தும். இதனால் இத்துறையினர் பெரும் சவாலைச் சந்திக்க நேரும் என்பதால், வேறு விதமான சலுகைகளை வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா, USA உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.