News August 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 440 ▶குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
▶ பொருள்: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும்.
Similar News
News August 27, 2025
விநாயகர் சதுர்த்தியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் போது, கண்டிப்பாக இந்த தவறுகளை செய்யக் கூடாது:
1. வாங்கி வரும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறமாக இருக்கக்கூடாது.
2. விநாயகர் சிலையை தனியாக வைக்காமல், லட்சுமி அல்லது சிவன்- பார்வதி, முருகன் விக்ரகம் அல்லது படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும்.
3. துளசி தேவி விநாயகரால் சபிக்கப்பட்டவர் என்பதால், விநாயகருக்கு துளசி வைக்கக்கூடாது. SHARE IT.
News August 27, 2025
My11 Circle ஒப்பந்தத்தை ரத்து செய்யும் BCCI?

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், Dream 11 உடனான ஒப்பந்தத்தை BCCI ரத்து செய்தது. இந்நிலையில், IPL-ன் அசோஸியேட் ஸ்பான்சரான My11 Circle உடனான ₹125 கோடி ஒப்பந்தத்தை BCCI ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், TOYOTA நிறுவனம், புதிய ஜெர்ஸி ஸ்பான்சராக இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News August 27, 2025
பிக்பாஸ் பிரபலத்தால் பரிகார பூஜையில் குருவாயூர் கோயில்

பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், குருவாயூர் கோயில் குளத்தில் கால் நனைத்ததை இன்ஸ்டாவில் வெளியிட்டார். இந்து மதம் அல்லாத பிற மதத்தவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்ற நிலையில், ஜாஸ்மினின் செயலால் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், நேற்று மதியம் முதல் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வீடியோவை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார் ஜாஸ்மின்.