News April 9, 2024
ரொனால்டோ அணி அதிர்ச்சி தோல்வி

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், அல்-நாசர் அணி தோல்வி அடைந்துள்ளது. அல்-ஹிலால் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அல்-ஹிலால் அணி முன்னிலை வகித்தது. எதிரணி வீரரை தாக்கிய ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இறுதி நிமிடத்தில் அல்-நாசர் அணி 1 கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
Similar News
News January 25, 2026
உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் திட்டம்!

பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த மாதம் 2-வது வாரத்தில் உதயநிதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றை அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதன் பின்னர், கடந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்புகளை இழந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி திட்டமிட்டுள்ளாராம்.
News January 25, 2026
பிரபல பாடகர் மாரடைப்பால் காலமானார்

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அபிஜித் மஜும்தார்(54) மாரடைப்பால் இன்று காலமானார். ஒடியா திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த அபிஜித், 57 படங்களில் பணியாற்றி கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தனது இசையால் ஒடிசா மக்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் கவனம் ஈர்த்த அபிஜித்தின் திடீர் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News January 25, 2026
திமுக கூட்டணியில் ராமதாஸ்? திருமா ரியாக்ஷன்

பாமக (அன்புமணி), அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபற்றி திமுக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது) என்றும் அவர் கூறினார். முன்னதாக, ராமதாஸ் பெறாத பிள்ளை திருமா என பாமக MLA அருள் கூறியிருந்தார்.


