News August 27, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களிடம் ஸ்டாலின் முகாம், நாளை வார்டு எண் 44கக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி கலைக்கூடம், கோம்புபாளையம் சமுதாய கூடம், கடவூர் வரவணை சமுதாய கூடம், சேந்தமங்கலம் (மேற்கு), இனங்கனூர் ஊராட்சிகள் மற்றும் வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

Similar News

News August 27, 2025

கரூர்: 19 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி

image

கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.

News August 27, 2025

கரூர் ராக்கெட் பந்து வீரர்கள் சாதனை!

image

கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான U-19 பிரிவிலான ஆண்களுக்கான ராக்கெட் பந்து போட்டியில் கரூர் மாவட்டம் 4ஆம் இடம் பிடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய குணா மற்றும் யோகபாலன் ஆகிய இருவரும் தேசிய போட்டிக்கு தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் வைரப்பெருமாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News August 26, 2025

கரூர்: கை ரேகை வேலை செய்யலையா?

image

கரூர் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, கரூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

error: Content is protected !!