News August 27, 2025

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு 16 வயதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாறன்(58) என்பவரை கைது செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மாறனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Similar News

News August 27, 2025

கோவை மக்களே இன்று இங்கு போங்க.!

image

ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை கோயம்புத்தூரில் புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் உள்ளது. இன்று (ஆக.27) விநாயகர் சதுர்த்தியான இந்நாளில் இவரை நேரில் சென்று தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாக கருத்தப்படுகிறது. இந்நாளில் இவருக்கு பிடித்த அரும்கம்புல், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படையலிடுவது சிறப்பு. கேட்டதை அருளும் முந்தி விநாயரின் பெருமைகளை மற்றவருக்கும் ஷேர் செய்யுங்க!

News August 27, 2025

உச்சம் தொட்ட மல்லிக்கைப்பூ கிலோ ரூ.2000

image

கோவை மலர் சந்தையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 10 டன் வரத்து இருந்த நிலையில் நேற்று 25 டன் பூக்கள் வந்தன. மல்லிகை கிலோ 2000-2200, ஜாதி மல்லி 1200, ரோஸ் 300-320, செவ்வந்தி 400 ரூபாய்க்கு விற்றன. மழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், விலை இருமடங்கு உயர்ந்துள்ளதாக மலர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

News August 27, 2025

கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை வேளாண்மை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் இந்த வாரம் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்படி, கோவை ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு மேலும் 29ம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!