News August 27, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை, டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 31ஆம் தேதி தர்மபுரம் கலைக்கல்லூரி, ஸ்ரீகுரு ஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 706 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 8.30க்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் 9:00 மணிக்கு மேல் வந்தால் அனுமதி வழங்கப்படாது, எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

மயிலாடுதுறை: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெடி பாலமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

News August 26, 2025

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சரகத்திற்கு குத்தாலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சீர்காழி சரகத்திற்கு புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளனர்.

error: Content is protected !!