News August 27, 2025
செல்ஃபி எடுப்பதில் இந்தியா ஆபத்தான நாடு

அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.
Similar News
News August 27, 2025
RSS பாடல் பாடியதால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட DK சிவக்குமார்

கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது DCM டிகே சிவக்குமார் RSS பாடலை பாடினார். பாஜகவை விமர்சிக்கும் நோக்கில் அந்த பாடலை பாடியதாக சிவக்குமார் கூறினாலும், காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் இதனை வைத்து அரசியல் செய்ய முயல்வதாக கூறிய அவர், தனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
News August 27, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 27)

1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
News August 27, 2025
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.