News August 26, 2025
ரேஷன் பொருள்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்க வேண்டுமா?

மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே கொண்டுவரும் திட்டத்தை ஆக.12-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதத்தின் 2-ம் சனி, ஞாயிறுகளில் ரேஷன் ஊழியர்கள் பொருள்களை கொண்டு வருவார்கள். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்கின்றனர். SHARE IT
Similar News
News August 27, 2025
மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.
News August 27, 2025
புஜாராவின் ஆட்டத்தை சிலாகித்த விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த புஜாரா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், புஜாராவிற்கு தனது நன்றியை விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி என்றும் உங்களது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
News August 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 440 ▶குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
▶ பொருள்: தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும்.