News August 26, 2025
பாஜகவுக்கு புதிய தலைவர்.. ரேஸில் முந்தியது யார்?

BJP தேசிய தலைவர் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2020 முதல் தலைவராக உள்ள JP நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைந்தபோதிலும், புதிய தலைவர் தேர்வு இழுபறியால் அவரே நீடிக்கிறார். இதனிடையே, BJP புதிய தலைவர் பொறுப்புக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை RSS டிக் அடித்துள்ளதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடே டெல்லியில் மோகன் பகவத்தை 45 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளாராம்.
Similar News
News March 12, 2026
இஸ்ரேலை அழிப்போம்: ஈரான்

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் ரஹீம் சஃபாவி, இஸ்ரேலை நிச்சயம் அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார். மத்திய கிழக்கில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே சமயத்தில் நிலைத்திருக்க சாத்தியமில்லை என்றும், இரண்டில் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், டிரம்ப் மோசமான மற்றும் முட்டாள்தனமான அமெரிக்க அதிபர் என்றும் விமர்சித்தார்.
News March 12, 2026
கரூர் துயர வழக்கில் எனக்கு நோட்டீஸா? செந்தில் பாலாஜி

கரூர் வழக்கில் CBI தனக்கு சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்ற அவர், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறித்து சிலர் விமர்சிப்பது ஏன் என கேட்டுள்ளார். மேலும், கரூர் சம்பவம் நடந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அனைவருக்குமே சம்மன் அனுப்பியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கஷாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கஷாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ➤செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கஷாயம் ரெடி. இதனை காலை, மாலை என இருவேளைகளும் பருகலாம். SHARE IT.


