News April 9, 2024
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் (08.04.2024) நிறைவு பெற்றது. ஆகையால், இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு (அ) பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர். மே.10ம் தேதி இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஹேப்பி அறிவிப்பு

உங்களது ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம் ஏதும் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? நாளை (ஜன.24) சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன. வழக்கமாக மாதத்தின் 2-வது வாரத்திலும் நடைபெற வேண்டிய இந்த மாதாந்தர முகாம், பொங்கல் விடுமுறை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை நடைபெறுகிறது. எனவே, தேவையான ஆவணங்களுடன் சென்று திருத்தங்களை மேற்கொள்ளுங்கள். SHARE IT
News January 23, 2026
தவெகவில் இணைகிறாரா புகழேந்தி?

OPS ஆதரவாளராக இருந்துவந்த புகழேந்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, OPS, டிடிவி தரப்பில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள் பலரையும் சேர்த்து கூண்டோடு அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 நாள்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை கூறவுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து புகழேந்தியும் கட்சி மாறுவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 23, 2026
ஆர்டர் பண்ணாமலே பொருள் வருதா… கவனமா இருங்க

Flipkart, Amazon ஆகியவற்றில் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு பொருள் வந்துள்ளது என கூறி சிலர் நூதன மோசடி செய்து வருகிறார்கள். அந்த ஆர்டரை கேன்சல் பண்ண, ஒரு கஸ்டமர் கேர் நம்பரை கொடுக்கிறார்கள். நீங்கள் அதில் அழைத்து பேசினால், ஒரு OTP-யை அனுப்புகிறார்கள். அதை நீங்க சொன்ன உடனேயே, உங்க போன் நம்பருடன் லிங்க் ஆகியிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.


