News August 26, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News August 27, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை.. 80,277 பேர் விண்ணப்பம்!

கடந்த ஜூலை 15- ஆம் தேதி முதல் ஆக.23- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் 70,363 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 80,277 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
சேலம் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு ஓணம் சிறப்பு ரயிலை (06009) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.28-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூர் சென்றடையும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.