News August 26, 2025
கோலிக்கு சளைத்தவர் இல்லை புஜாரா: அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, ரோஹித்துக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் புஜாராவிற்கு கிடைக்கவில்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார். புஜாராவின் பங்களிப்புகள் கோலி, ரோஹித்தை விட குறைவானவை இல்லை எனவும், டெஸ்ட்டில் கோலி அதிக ரன்கள் எடுக்க புஜாரா ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்களுடன் 7195 ரன்கள் எடுத்த புஜாரா சமீபத்தில் ஓய்வை அறிவித்தார்.
Similar News
News August 27, 2025
இனி பாட்டோடு சேர்த்து அரட்டையும் அடிக்கலாம்

பயனர்களை Engaging-ஆக வைத்துக் கொள்ள Spotify நிறுவனம் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் இருப்பதை போன்ற Direct Message (DM) அம்சத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாடல்கள், பாட்காஸ்ட், ஆடியோ புத்தகங்களை விரும்பிய நபர்களுக்கு அனுப்புவதோடு Chat-ம் பண்ணலாம். இதில் பயனர்கள் தங்களுக்கு வரும் Request-களை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும்.
News August 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 27, 2025
தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்: கவாஸ்கர்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது குறித்து பல வெளிநாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்ததற்கு சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வெளிநாட்டினர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாகவும், இந்திய கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லாமல் வேண்டுமென்றே விவாதத்தை ஏற்படுத்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.