News August 26, 2025

BREAKING: விழுப்புரம்- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.84 கோடி நிதி

image

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணைக்கட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விடாமல் கனமழை பெய்ததால், அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணையை சீரமைக்க ரூ.84 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே<> கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

News August 26, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை காணலாம்.

News August 26, 2025

விழுப்புரத்தில் மக்கள் நீதிமன்றம்

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய அளவில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கேட்டுகொண்டுள்ளார்.

error: Content is protected !!