News August 26, 2025
முதலமைச்சர் கோப்பையில் பங்கேற்க சேலத்தில் 54,157 பேர்!

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு சேலம் மாவட்டத்தில் பள்ளி பிரிவில் 35,996 பேரும்,கல்லூரி பிரிவில் 7,633 பேரும்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,165 பேரும்,அரசு ஊழியர்கள் பிரிவில் 1,625 பேரும், பொதுப்பிரிவில் 6,738 பேரும் என மொத்தம் 54,157 பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
சேலம் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கண்ணூருக்கு ஓணம் சிறப்பு ரயிலை (06009) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.28-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கண்ணூர் சென்றடையும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
News August 26, 2025
சேலம்: இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரத்தில் 26.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; J.ஜெய்சல்குமார் (94981-78821) , P.குமார் (94981-74170), R.பால்ராஜ் (94436-21083), D.காந்திமதி (94981-75610), ஆகியோர் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.