News August 26, 2025
சட்டம் அறிவோம்: குழந்தையை கைவிடுவோருக்கான தண்டனை

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து BNS சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 27, 2025
டிரம்ப் அழைப்பை நிராகரித்த PM மோடி

சமீபத்திய நாள்களில் PM மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், மோடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்ததாக ஜெர்மன் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நியாயமும் இல்லாமல், இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் அந்த கோபத்தில் அவர் அப்படி செய்துள்ளார் என்றும், இதுவே இந்தியா சீனாவை நோக்கி திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
News August 27, 2025
கோவாவில் அக்.30 முதல் செஸ் உலகக்கோப்பை…

கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.
News August 27, 2025
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அறிவிப்பு

2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.