News April 9, 2024

கச்சத்தீவைப் பற்றி இதற்காக தான் பேசுகிறார்கள்

image

இந்திய – சீன எல்லை விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே கச்சத்தீவு பிரச்னையை பாஜக தூண்டுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், “கச்சத்தீவு பிரச்னையில் திமுக அமைதியாக இல்லை. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான் அமைதியாக இருந்தது. பிரதமர் மோடி பலமுறை இலங்கைக்கு போய் வந்திருக்கிறார். அப்போது கூட அந்நாட்டு அரசிடம் அவர் இதுகுறித்து பேசவில்லை” என்றார்.

Similar News

News November 12, 2025

தஞ்சை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை

image

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு, மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவசமாக ஆடு, மாடு, கொடுப்பது போல், ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பாங்க என்று அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு அவர் சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது.

News November 12, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

கடந்த 2 நாள்களாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹100 குறைந்து ₹11,600-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை எதிரொலியால் இன்று விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!