News August 26, 2025

3 மாதத்துக்கு 50GB இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

image

அதிகமாக டேட்டா பயன்படுத்தும் பயனர்களுக்காக வோடபோன் சூப்பரான ஆஃபர் கொடுக்கிறது. ₹3,799-க்கு ரிசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும். மேலும், இந்த பிளானுடன் 90 நாள்களுக்கு 50GB டேட்டா இலவசமாக வழங்கப்படும். அதேபோல், ₹3499-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியுடன் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படும். இதற்கும், 50GB இலவச டேட்டா பொருந்தும். SHARE IT.

Similar News

News August 27, 2025

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அறிவிப்பு

image

2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

News August 27, 2025

செல்ஃபி எடுப்பதில் இந்தியா ஆபத்தான நாடு

image

அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.

News August 27, 2025

ராசி பலன்கள் (27.08.2025)

image

➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – மறதி ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – உயர்வு ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – புகழ் ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – பெருமை ➤ மகரம் – சுபம் ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – போட்டி.

error: Content is protected !!