News August 26, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

வைணவ திருக்கோவில் சுற்றுலா திட்டம் தொடக்கம்

image

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஒருநாள் வைணவ திருக்கோவில்கள் சுற்றுலா – சென்னை -1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து பஸ் புறப்படும். பயணத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஸ்தலசயன பெருமாள் கோவில் உட்பட 6 திவ்யதேச கோவில்கள் அடங்கும். பயணக்கட்டணம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 26, 2025

சென்னையில் மளமளவென உயர்ந்தது..!

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. மதுரை மல்லிகை கிலோ ரூ.2000, பிச்சிப்பூ ரூ.1200, முல்லைப்பூ ரூ.1000 என விற்பனை ஆகிறது. செவ்வந்தி ரூ.350, அறுகம்புல் ரூ.100, அரளி ரூ.500, சம்பங்கி ரூ.400, துளசி ரூ.50 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று மதுரை மல்லியின் விலை மட்டும் ரூ.600 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!