News August 26, 2025

திருச்சி: பறவைகள் பூங்கா நாளை செயல்படும்

image

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

திருச்சி: தொழில்நுட்ப பணிகள் தேர்வு தேதி அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு திருச்சி மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 15 தேர்வு மையங்களில் 4415 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 15 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை தயாரிக்கும் பணி

image

திருச்சி, மலைக்கோட்டையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மலைக்கோட்டை மடப்பள்ளியில் 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி இன்று காலை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. 7 மணிக்கு மேல் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு கொழுக்கட்டை எடுத்துச் சென்று சாமிக்கு படைக்கப்பட உள்ளது.

News August 26, 2025

திருச்சி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

திருச்சி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!