News August 26, 2025
ஜனநாயகனில் கேமியோ கொடுக்கும் Pan Indian ஸ்டார்!

விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகனில் இயக்குநர்கள் லோகேஷ், விக்னேஷ் சிவன் ஆகியோர் பத்திரிகையாளர்களாக கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தது. அந்த வரிசையில் தற்போது படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வேட்டையனில் ரஜினியுடன் இணைந்தும், ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் உடன் இணைந்தும் அவர் நடனமாடியது நினைவுகூரத்தக்கது.
Similar News
News August 26, 2025
டிரம்ப் மிரட்டல்.. இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஆப்பிள்

ஐபோன் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் நாளை முதல் 50% வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால், டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.
News August 26, 2025
BREAKING: ஓணம் விடுமுறை.. வெளியான ஸ்பெஷல் அறிவிப்பு

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
News August 26, 2025
16 தொகுதிகள்.. கோயில் நகரங்களை குறிவைக்கும் பாஜக

2026 தேர்தல் வேலையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இம்முறை இரட்டை இலக்க MLA-க்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே, முதற்கட்ட விருப்ப தொகுதிகள் பட்டியல் அமித்ஷாவின் கைக்கு சென்றுள்ளது. அதில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீரங்கம், தி.மலை உள்ளிட்ட 16 கோயில் நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளதாம். இதனால், அந்த பகுதியின் அதிமுக தலைகள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.