News August 26, 2025
தென்காசியில் நாளை பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

தென்காசி நகரத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நாளை (26/08/25) செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News August 26, 2025
தென்காசி ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தென்காசி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!
News August 26, 2025
தென்காசி: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

தென்காசி மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள வெற்றி விநாயகர் தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..
News August 26, 2025
தென்காசி: ரேஷன் கடை குறித்த புகாரா?

தென்காசி: மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04633-212114 எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.