News August 26, 2025

சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.26) இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) ரத்துச் செய்துள்ளது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News August 26, 2025

இலவச போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 38 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தாட்கோ மூலம் இலவசமாக தங்குமிடம் உணவுடன் போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 26, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News August 26, 2025

சேலத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு: அரிய வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆக.28ம் தேதி ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும்! SHARE பண்ணுங்க யாருக்காவது உதவும்!

error: Content is protected !!