News August 26, 2025
விழுப்புரம்: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 26, 2025
விழுப்புரம் விநாயகர் பற்றிய வரலாறு குறிப்பு

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே ஆலகிராமம் உள்ளது, இங்குள்ள பழமை வாய்ந்த எமதண்டீஸ்வரர் கோயிலில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விநாயகர் சிற்பத்தில் வட்டெழுத்து கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் இன்று (26) கூறியுள்ளார்.
News August 26, 2025
BREAKING: விழுப்புரம்- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.84 கோடி நிதி

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணைக்கட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விடாமல் கனமழை பெய்ததால், அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணையை சீரமைக்க ரூ.84 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.
News August 26, 2025
விழுப்புரம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<