News August 26, 2025
தர்மபுரி: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 14, 2025
தருமபுரி: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 14, 2025
தருமபுரி: ரயில் சேவையில் மாற்றம்!

தருமபுரி மார்க்கத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் நவ.16ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, பெங்களூர்-எர்ணாகுளம் ரயில் தருமபுரி வழியாக செல்லாமல், திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-காரைக்கால் (16529) ரயில், பையனப்பள்ளி வழியாக சேலம் செல்லும். பெங்களூர்-கோவை வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


