News August 26, 2025

₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Similar News

News August 26, 2025

அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

image

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 26, 2025

Beauty Tips: ₹3000 கிரீம் வேணாம்.. ₹10 படிகாரம் போதும்

image

அழகுக்காக தாத்தா காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் படிகாரம். இதில் உள்ள ஆண்டி-ஏஜெண்ட்கள் முகப்பரு, Open Pores, எண்ணெய் வடிதல் பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யுமாம் ▶முதலில் படிகாரத்தை பொடியாக அரைத்து, ரோஸ் வாட்டர் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் ▶இதனை முதலில் உங்கள் கையில் தடவி அலர்ஜி ஆகிறதா என சோதித்துப்பாருங்கள் ▶பிறகு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். SHARE.

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?

error: Content is protected !!