News August 26, 2025

BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 26, 2025

கோவை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9952507068-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 26, 2025

கோவையில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 26, 2025

ஆணவ படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்- தமிழிசை!

image

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்கள் இடையே பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும் என்றார்.

error: Content is protected !!