News August 26, 2025
வரும் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண் இடுபொருள், இருப்பு விபரங்கள், மானியத் திட்டங்கள் அறிந்துகொண்டு மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டா் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
நாமக்கல் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.26) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News August 26, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.26) நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – ராதா (94981743333), வேலூர் – தேவி (9842788031) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 26, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் தொடர்ந்து மாற்றமில்லாமல் ஒரு முட்டையின் பண்ணைக்கு கொள்முதல் விலை ரூ.5 நீடிக்கிறது.