News April 9, 2024

ஜெயித்தாலும் சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

image

கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றும் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. 5 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 2 தோல்வி 3 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. லக்னோ அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 3 ஆவது இடத்தில் தொடரந்து நீடிக்கிறது. ஆனாலும் ரன் ரேட் அடிப்படையில் லக்னோ அணி சென்னையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Similar News

News February 4, 2026

விஜய்க்கு கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லை: ஜெயக்குமார்

image

கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்​கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சி விழாவில் விஜய் டான்ஸ் ஆடுகிறார் என்ற அவர், அந்த 41 குடும்​பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்​படு​வார்கள் என்பதை விஜய் நினைத்துப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 41 பேர் உயிரிழந்ததை பற்றி அவர் ஏதாவது பேசியிருக்​கி​றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 4, 2026

ஆன்லைன் கேமிங் கொடூரம்.. 3 சிறுமிகள் தற்கொலை!

image

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையான 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உ.பி.,யின் காசியாபாத்தை சேர்ந்த 3 சகோதரிகளும் கொரோனா காலக்கட்டம் முதலே ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பை புறக்கணித்த மூவரையும் தொடர்ந்து பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த மூவரும், அபார்ட்மெண்ட்டின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

News February 4, 2026

கல்கி-2-ல் 2 கெட்டப்பில் அசத்தும் கமல்

image

பிரபாஸின் ‘கல்கி -2’ படத்தில் கமலுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய கமல், இரண்டாம் பாகத்தில் கிட்டதட்ட 90 நிமிடங்கள் வருவாராம். அதுமட்டுமல்லாமல், 2 கெட்டப்களில் கமல் இதில் நடிக்கிறார். மேலும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

error: Content is protected !!