News August 26, 2025
திண்டிவனம்: ஊசி போட்ட 6 குழந்தைகளுக்கு பாதிப்பு

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு, 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான ஊசி போடப்பட்டது. இதில், 6 குழந்தைகளுக்கு வலிப்பு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 26, 2025
BREAKING: விழுப்புரம்- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.84 கோடி நிதி

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணைக்கட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விடாமல் கனமழை பெய்ததால், அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணையை சீரமைக்க ரூ.84 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.
News August 26, 2025
விழுப்புரம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<
News August 26, 2025
விழுப்புரம் ஆட்சியர் பெண்களுக்கு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற தகுதியுள்ள பெண்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ரகுமான் தெரிவித்துள்ளார்.