News August 26, 2025

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகையில் புகாரளிக்கலாம்

image

தூத்துக்குடி மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால்<> இங்கே க்ளிக் செய்து<<>> அரசுக்கு புகார் தெரிவிக்க முடியும். அதில் உரிமை தொகை பெறும் தகுதியற்ற நபரின் விவரங்களை பதிவிட்டு புகாரளிக்கலாம்.

Similar News

News August 26, 2025

தூத்துக்குடியில் 13 ரவுடிகள் அதிரடி கைது

image

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், பாலமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கிருஷ்ணராஜபுரம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த 13 ரவுடிகளை போலீசார் இன்று(ஆக.26) கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News August 26, 2025

தூத்துக்குடி மக்களே! கஷ்டமா.. இங்க போங்க..!

image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள இந்த ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு போய் ஒரு தடவ நீங்க தரிசனம் செஞ்ச போதும், உங்க மனக்குழப்பம், தீராத நோய், திருமணத்தடை போன்ற எல்லாமே சரியாகி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நாளை(ஆக.27) நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் வழிபட்டு உங்க கஷ்டத்தை போக்குங்க. உங்க நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

தூத்துக்குடியில் சினிமா பாணியில் திருட்டு

image

தூத்துக்குடி டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சேலத்தில் வைத்து விட்டலை கைது செய்தனர்.

error: Content is protected !!