News August 26, 2025
நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிள், பணிபுரியும் அலுவலர்கள் பணிகளை செய்து கொடுக்க லஞ்சம் கேட்கக்கூடாது. இதை மீறி யாராவது லஞ்சம் கேட்டால், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகாரளிக்கலாம். மேலும், 04286-281331, 9445048878, 9498190735, 9445048933 ஆகிய மொபைல் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 26, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரையிலான, இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்வதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News August 26, 2025
வரும் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண் இடுபொருள், இருப்பு விபரங்கள், மானியத் திட்டங்கள் அறிந்துகொண்டு மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டா் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.