News August 26, 2025
RECIPE: சத்துள்ள குதிரைவாலி தக்காளி தோசை!

◆குதிரைவாலி ரத்த சோகையை தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
➥குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். இதனை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
➥தக்காளி, சீரகம், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து, புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
Similar News
News August 26, 2025
FLASH: பங்குச்சந்தைகள் நேற்று உயர்வு, இன்று கடும் சரிவு!

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 849 புள்ளிகள் சரிந்து 80,786 புள்ளிகளிலும், நிஃப்டி 255 புள்ளிகள் சரிந்து 24,712 புள்ளிகளும் வர்த்தகமாகின. குறிப்பாக Reliance, Sun Pharma, Shriram Finance, Tata Steel, Bajaj Finance, Trent உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News August 26, 2025
BREAKING: பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News August 26, 2025
3 மாதத்துக்கு 50GB இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

அதிகமாக டேட்டா பயன்படுத்தும் பயனர்களுக்காக வோடபோன் சூப்பரான ஆஃபர் கொடுக்கிறது. ₹3,799-க்கு ரிசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியில் தினமும் 2GB டேட்டா கிடைக்கும். மேலும், இந்த பிளானுடன் 90 நாள்களுக்கு 50GB டேட்டா இலவசமாக வழங்கப்படும். அதேபோல், ₹3499-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியுடன் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படும். இதற்கும், 50GB இலவச டேட்டா பொருந்தும். SHARE IT.