News April 9, 2024
தென்காசி: தபால் வாக்கு பெறும் தேதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் கமல் கிஷோர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்கள் படிவம் 12 டி-யில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வருகிற 10, 11,12 ஆகிய தினங்களில் வீடுகளுக்கு வந்து வாக்கு பதிவு செய்யப்படும் எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் வீடுகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
தென்காசி: சென்ட்ரல் மீடியனில் மோதி லாரி விபத்து

விருதுநகர் – திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டம், இலத்தூர் வழியாக கேரள மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்களில் சிமெண்ட் ஏற்றி செல்கின்றனர். நேற்று சுமார் 5 மணி அளவில் கேரளாவுக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இலத்தூர் ஈனா விளக்கு பகுதி சாலையின் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
News March 13, 2026
தென்காசி: இனி Gpay, Phonepe தேவையில்லை!

தென்காசி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..


