News August 26, 2025

பஸ் விவகாரம் கோவை கலெக்டருக்கு அதிரடி உத்தரவு!

image

கோவை காந்திபுரத்தில் இருந்து இயக்கப்படும் 21, 21 பி பேருந்துகள் கெம்பனூர் நிறுத்தத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகருக்கு சாதிய பாகுபாடு பார்த்து இயக்கப்படாமல் 400 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் கோவை கலெக்டருக்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Similar News

News September 21, 2025

கோவை மக்களே: வியாபாரம் செய்ய வங்கி கடன்!

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 22.09.2025 முதல் 26.09.2025 வரை சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம் நடைபெறுகிறது. ரூ.15,000 கடன் பெற புதிதாக விண்ணப்பிப்போரும், முன்பு விண்ணப்பித்து கடன் பெறாதவர்களும் ஆதார், வியாபாரிகள் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உடன் கலந்து கொள்ளலாம் என கோவை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News September 21, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 21, 2025

கோவை: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

கோவை மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI<<>> என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். (SHAREit)

error: Content is protected !!