News August 26, 2025

திருவான்மியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

image

திருவான்மியூரில் பைக், சைக்கிள் நேருக்கு நேர் மோதி சாலைத் தடுப்பில் இடித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரித்விக் ராய்(24) என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பெண் தோழியை அழைக்க பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் சைக்கிளில் வந்த ரமேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News August 26, 2025

சென்னையில் மளமளவென உயர்ந்தது..!

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. மதுரை மல்லிகை கிலோ ரூ.2000, பிச்சிப்பூ ரூ.1200, முல்லைப்பூ ரூ.1000 என விற்பனை ஆகிறது. செவ்வந்தி ரூ.350, அறுகம்புல் ரூ.100, அரளி ரூ.500, சம்பங்கி ரூ.400, துளசி ரூ.50 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று மதுரை மல்லியின் விலை மட்டும் ரூ.600 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News August 26, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

BREAKING: மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

image

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் இன்று (ஆக.26) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்ற குழு தலைவர் ஆர்.ஜெயராமன், தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

error: Content is protected !!