News August 26, 2025
சிவகாசி அருகே ராணுவ வீரர் மரணம்

விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மிரில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News August 26, 2025
விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
சிவகாசியில் இந்தாண்டு 30% விலை உயரும்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் மொத்த வியாபாரிகள் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி முன்கூட்டியே வரும் நிலையில் அதிக அளவிலான வெடி விபத்து விபத்தின் காரணமாக நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பட்டாசு 30% வரை விலை உயர வாய்ப்புள்ளது.
News August 26, 2025
மாவட்டத்தில் 1200 ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 318 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்கள் என மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதே போல் 1200 அரசுப் பள்ளிகளில் 69,333 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.