News August 26, 2025
தூத்துக்குடியில் 10 உழவர் நல மையம் அமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இம்மையங்கள் மூலம் விதைகள், உரங்கள், பூச்சி-நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Similar News
News August 26, 2025
தூத்துக்குடியில் சினிமா பாணியில் திருட்டு

தூத்துக்குடி டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சேலத்தில் வைத்து விட்டலை கைது செய்தனர்.
News August 26, 2025
தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகையில் புகாரளிக்கலாம்

தூத்துக்குடி மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால்<