News August 26, 2025
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன். *நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்; நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி. *ECG வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
Similar News
News August 26, 2025
BREAKING: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
News August 26, 2025
விஜய்காந்த் நிலை விஜய்க்கும் வரலாம்: செல்வப்பெருந்தகை

விஜய் நாகரிகமாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தலில் 10% வாக்குகள் பெற்றார். தற்போது அக்கட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும்; நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கி நடத்திய மாநாட்டில் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். கடைசியில் அக்கட்சி காங்கிரஸுடன் இணைந்தது; இதேநிலை விஜய்க்கும் வரலாம் என செல்வப்பெருந்தகை சூசகமாக தெரிவித்தார்.
News August 26, 2025
கடவுளை ஏமாத்த முடியாது.. ரவியை அட்டாக் பண்ண ஆர்த்தி!

சொகுசு பங்களாவை ஜப்தி பண்ண, நோட்டீஸ் வீடு தேடி வந்தாலும், தயாரிப்பு நிறுவனம் துவக்க விழா வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ரவி மோகன். இந்த நிலையில், ஆர்த்தி ரவி ‘நீங்கள் மற்றவர்களை ஏமாற்றலாம், உங்களையே ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது’ என இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ரவியை அட்டாக் பண்ணி தான் இப்படி ஒரு ஸ்டேட்டஸை வைத்துள்ளார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.