News August 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 26, ஆவணி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
Similar News
News August 26, 2025
3 BHK படம் பிடித்திருந்தது: சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் சச்சின் ரெடிட் வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் பிடித்த படங்களின் பட்டியலை ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சச்சின், தமிழில் வெளியான ’3BHK’, மராத்தி படமான ’Ata Thambaycha Naay’ பிடித்திருந்ததாக கூறியுள்ளார். சச்சினில் இந்த பதிலை பார்த்த 3BHK பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் ட்விட்டரில் சச்சினுக்கு நன்றி கூறியிருக்கிறார்.
News August 26, 2025
நள்ளிரவு முதல் தொடங்கியது.. மிஸ் செய்யாதீங்க

‘அக்னிவீர்’ திட்டத்தில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கை, ஈரோட்டில் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் செப்.7 வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோர், தீவிர பயிற்சிக்கு பின், ராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவர். கூடுதல் எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News August 26, 2025
Health Tips: சாப்பிட்ட உடன் டீ காபி குடிக்கிறீர்களா? உஷார்!

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் உடல்நலனில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். டீ, காபியில் இருக்கும் Tannic acid நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை உங்கள் உடலில் சேரவிடாமல் தடுத்துவிடும். இதனால் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி-ஐ தவிர்த்துவிடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.