News August 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 26, 2025
இதெல்லாமே ரயிலில் இலவசம் தெரியுமா..

➤ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொண்டு இலவச முதலுதவியை பெறலாம்.
➤துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்கள் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக சென்றால், உணவை இந்தியன் ரயில்வே இலவசமாக வழங்கும்.
➤ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி, மற்றொரு ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழலில், கான்பார்ம் டிக்கெட் இருந்தால், ஸ்டேஷனின் Waiting Room-ல் இலவசமாக ஓய்வு எடுக்கலாம்.
News August 26, 2025
இரவில் அதிமுகவில் ஐக்கியம்.. கூட்டணியில் பிரச்னை?

தேமுதிக வெளிப்படையாக கூட்டணியை அறிவிக்கவில்லை என்றாலும், <<17517599>>பிரேமலதாவின் <<>>செயல்பாடுகள் மூலம் அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக கூட்டணிக்கு வாய்ப்புள்ள கட்சியில் இருந்து ஆள் தூக்கும் வேலையை, எந்த கட்சியும் செய்யாது. ஆனால் நேற்று இரவு தேமுதிகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால், கூட்டணி அமைப்பதில் பிணக்கு வருமா என கேள்வி எழுந்துள்ளது.
News August 26, 2025
வயிற்று தசைகளை வலுவாக்கும் அர்த்த நவாசனம்!

✦வயிற்றுத் தசைகளை வலுவாக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
➥தரையில் கால்களை நீட்டி, முதுகை நேராக இருக்கும்படி உட்காரவும்.
➥முதுகை சாய்த்து, கால்களின் முட்டியை மடக்கி, தலை & பாதங்களை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி உட்காரவும்.
➥அடிவயிற்றின் தசைகளை இறுக்கி, மார்பை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்தவும். இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை, இருந்துவிட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.