News August 26, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (25/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
Similar News
News August 26, 2025
திருவள்ளூர்: வேலை தேடுவோர் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகம், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
பள்ளி சமையல் அறையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் சமையலர் அபிராமி நேற்று மதிய உணவு சமைக்கும் போது எரிவாயு கசிவால் தீப்பற்றியது. அருகில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லாத நிலையில், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News August 26, 2025
திருவள்ளூர்: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிர்வாகமும், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.